சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் குறுக்கே வந்த ஆடுகளால் விபரீதம்: கார் மீது லாரி மோதி எஸ்.ஐ., உள்பட 4 பேர் பலி

Added : டிச 03, 2019
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியில் கார் மீது லாரி மோதியதில், எஸ்.டி.எஃப்., எஸ்.ஐ., உள்பட, நான்கு பேர் பலியாகினர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிறப்பு இலக்கு படையில் (எஸ்.டி.எஃப்.,) எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் செல்வம், 40; கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர். சத்தியில், எஸ்.ஆர்.டி., கார்னர் பகுதியில் வசித்தார். சத்தி அருகே, புதுகுய்யனூரில் வேறு வாடகை வீடு பார்த்து பால் காய்ச்ச, மாருதி

சத்தியமங்கலம்: சத்தியில் கார் மீது லாரி மோதியதில், எஸ்.டி.எஃப்., எஸ்.ஐ., உள்பட, நான்கு பேர் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிறப்பு இலக்கு படையில் (எஸ்.டி.எஃப்.,) எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் செல்வம், 40; கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர். சத்தியில், எஸ்.ஆர்.டி., கார்னர் பகுதியில் வசித்தார். சத்தி அருகே, புதுகுய்யனூரில் வேறு வாடகை வீடு பார்த்து பால் காய்ச்ச, மாருதி வேகன்ஆர் காரில் நேற்று புறப்பட்டார். அவருடன் மனைவி தேவிஸ்ரீ, 38, மகள் ஜனனிஸ்ரீ, 2, நண்பர் முருகேசன், 40, சென்றனர். சத்தி- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், புதுவடவள்ளி பகுதியில், மாலை, 4:30 மணியளவில் கார் சென்றது. எதிரே வந்த சரக்கு லாரி டிரைவர், சாலையின் குறுக்கே வந்த ஆடுகள் மீது மோதாமல் இருக்க, வலதுபுறமாக திருப்பினார். அப்போது எதிரே வந்த கார் மீது, லாரி மோதியது. இதில், செல்வம், தேவிஸ்ரீ, ஜனனிஸ்ரீ உடல் நசுங்கி பலியாகினர். சத்தி போலீசார், தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி, மூவரின் உடல்களையும் மீட்டனர். காயமடைந்து உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய லாரி டிரைவரை, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X