பொது செய்தி

தமிழ்நாடு

அடையாற்றில் வெள்ளம்: கடலில் கலப்பது ஏன்?

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (24)
Advertisement
அடையாறு, வெள்ளம், கடல், கலப்பது ஏன்

இந்த செய்தியை கேட்க

சென்னை : அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரை சேமிக்க, எந்த கட்டமைப்பு திட்டங்களும் இல்லாததால், ஏராளமான நீர், கடலில் கலந்து வீணாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, ஆதனுார் ஏரி கலங்கலில் துவங்கும் அடையாறு ஆறு, சென்னை மாவட்டத்தில் நுழைந்து, 42 கி.மீ., பயணித்து, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகே வங்க கடலில் கலக்கிறது. கூடுவாஞ்சேரி, ஆதனுார், நந்திவரம், மண்ணிவாக்கம், ஒரத்துார், படப்பை, மணிமங்கலம், பெருங்களத்துார், இரும்புலியூர், திருநீர்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, அடையாறு ஆற்றுக்கு, நீர்வரத்து கிடைக்கிறது.

இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து, அடையாற்றுக்கு நீர் கிடைத்து வருகிறது. இதனால், வினாடிக்கு, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் கன அடி வரையிலான நீர், கடலில் கலந்து வருகிறது.


கிடப்பில் தடுப்பணை


அடையாற்றில் நீரை சேமிக்க, போதுமான கட்டமைப்புகள் இல்லை. மணப்பாக்கத்தில்மட்டுமே, சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் கழிவுநீர் கலப்பதால், தடுப்பணை கட்டும் திட்டத்தை, பொதுப்பணித்துறை செயல்படுத்தவில்லை. கழிவுநீர் கலப்பதை நிறுத்தினால் மட்டுமே, தடுப்பணை கட்டி, பயன்பெற முடியும். எனவே, இத்திட்டத்தை பொதுப்பணித்துறை கிடப்பில் போட்டுள்ளது. இதனிடையே, அடையாற்றில் வெளியேறும் நீரின் அளவை துல்லியமாக கண்டறிவதற்காக, சென்னை ஐ.ஐ.டி., வாயிலாக சைதாப்பேட்டை பாலம் மற்றும் அடையாறு திரு.வி.க., பாலங்களின் அருகே, தானியங்கி முறையில் நீரோட்டம் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஆற்றின் நீரோட்டத்தை, பொதுப்பணித்துறையால் துல்லியமாக கணக்கிட முடியவில்லை. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், இதுபோன்ற அளவீடு கருவிகளை பொருத்துவதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. இப்பணிகள் முடிந்த பின், பொதுப்பணித்துறையால், அடையாறு நீரோட்டத்தை கண்டறிய முடியும்.


20 ஆயிரம் கன அடி


பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடையாறு ஆற்றுப்படுகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளை ஒட்டியுள்ள, 37 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர், திருநீர்மலை சந்திப்பில், ஆற்றில் கலக்கிறது. 'சம்பந்தப்பட்ட பகுதியில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், மழைநீர் ஆற்றில் கலந்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 'முகத்துவாரம் அருகே, கடலில் கலக்கும் பகுதியில், 20 ஆயிரம் கன அடி வரை, தற்போது உபரிநீர் செல்ல வாய்ப்பு உள்ளது' என்றார்.


மாற்று திட்டமே இல்லையா?

வடகிழக்கு பருவமழை காலத்தில், ஓவ்வொரு ஆண்டும், அடையாறு ஆறு வழியாக, பல டி.எம்.சி., மழைநீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்தாண்டு மழைக்கு மட்டும், 3 டி.எம்.சி.,க்கும் மேலான நீர், ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கும் என, நீர்வள நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், குடிநீர் ஏரிகளில், 4 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே, நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, 1 டி.எம்.சி.,யை கூட, இன்னும் எட்டவில்லை. தற்போது தான், படப்பை அருகே, 0.75 டி.எம்.சி., கொள்ளளவில், புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம், பல ஆண்டுகளாக இழுபறியிலேயே உள்ளது. இந்நிலையில், படப்பை நீர்த்தேக்க திட்டம், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியே!

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
03-டிச-201919:34:07 IST Report Abuse
R chandar This work to be given to private company like l&t or some reputed company to ute the plan of saving over flow of water in to the river along with maintenance and distribution of water to entire city authority should take some bold steps and government should also support the same to ute the dream plan of cleaning adyar river and construct more storage point during rainy season
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-டிச-201919:02:23 IST Report Abuse
r.sundaram தமிழ் நாட்டில் அரசியலே சாக்கடையாக இருக்கிறது. இதில் ஒரு சாக்கடை மற்றோரு சாக்கடையை சுத்தப்படுத்தும்? முடியாது. சுத்தப்படுத்துவது என்ற பெயரில் அரசியல் வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் பையில் பணம் பொய் சேரும் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
03-டிச-201916:56:34 IST Report Abuse
ANANDAKANNAN K எல்லா மக்களுக்கும் தெரிந்த ஓன்று தா, இந்த ஆற்றை சுத்தம் செய்ய முடியாது, இதற்க்கு காரணம் சென்னை நகரத்தில் வரும் கழிவு நீர் இந்த ஆற்றில் தான் கலக்கிறது, ஒரு ஆய்வில் இந்த நதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உருவாகும் இந்த ஆறு நதி முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது. 42.5 கிலோமீட்டர் அல்லது 26.4 மைல் நீளம் கொண்ட இந்நதி சென்னையின் கழிவுநீர் கலக்கும் இடமாகத்தான் இருக்கும், அதாவது, சுமார் 860 சதுரகிலோமீட்டர்கள் அல்லது 331 சதுரமைல் பரப்புள்ள . நகரத்திலிருந்து பெரும்பாலான கழிவுகள் இந்த நதியில் கலக்கிறது, இப்படி பெரும் அளவில் கழிவுகள் கலக்கும் போது சுத்தம் சாத்தியம் இல்லை, மேலும் தமிழக அரசு சில திட்டங்களை செயல்படுத்திக்கிறது, அது என்னவென்றால் அடையாறு ஆற்றின் முதல் 25.4 கிமீ நீளம் வரையிலான இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள் 90 கோடி ரூபாய் செலவில் 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாத்த்தில் முடிய உள்ளது, இது எந்த அளவிற்கு சுத்தம் செய்ய பயன் கொடுக்குமோ தெரியவில்லை, மேலும் மொத்த உபரி நீரையும் அணை கட்டி தடுக்க முடியாது, கடலில் கலந்து தான் ஆகும், இது இயற்கை, இதுக்கு ஒரு தீர்வு என்னவென்றால் பறவைகள் சரணாலயம் மற்றும் பூங்கா அமைத்தல் போன்ற பொழுது போக்கு அம்சம் ஒன்றே உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X