பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் எக்ஸ்ரே வாகனத்துடன் காசநோய் சிகிச்சை முகாம்

Added : டிச 03, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நடமாடும் எக்ஸ்ரே வாகனத்துடன், காசநோய் சிகிச்சை முகாம் நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் சார்பில், வீடுகள் தோறும் காசநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம், குமாரபாளையம் பெராந்தர் காட்டில் நடந்தது. நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில் காசநோய் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவ குழுவினர் கூறியதாவது: மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் உள்ளனர். பெரந்தார் காடு பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களால், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எச்சில், தும்மல், இருமல் உள்ளிட்ட பல வகைகளில் நோய் பரவும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுதான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். வயதானவர்கள், ஆதரவற்றவற்றவர்களுக்கு சாத்தியம் இல்லை என்பதால், அரசு சார்பில் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்துடன் பிரசாரம் செய்வதுடன், அவரவர் வீட்டின் முன்பே வந்து எக்ஸ்ரே எடுத்து, தேவையான சிகிச்சை கொடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X