பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள அபாய எச்சரிக்கை: தண்டோரா மூலம் அறிவிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
பள்ளிபாளையம் ஆற்றுப் பகுதியில், நாட்டகவுண்டம்புதூர், ஜனதாநகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைபேட்டை மற்றும் பல பகுதிகள் உள்ளன. தற்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கரையோரப்பகுதியில், வருவாய்த்துறை, மற்றும் நகராட்சி சார்பில், தண்டோரா மூலம், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

தாசில்தார் தங்கம் கூறியதாவது: பவானி சாகர் அணையிலிருந்து தற்போது, 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் யாரும் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது எனவும், தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இடங்களை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


* குமாரபாளையம், மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, பாலக்கரை, இந்திரா நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், தாசில்தார் தங்கம் தலைமையில், வருவாய்த்துறையினர், வெள்ள அபாயம் குறித்து, தண்டோரா போட்டு எச்சரித்தனர்.

ஆர்.ஐ., சுப்பிரமணியம் கூறியதாவது: கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகள் உள்பட, மூன்று முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. நிலைமை சீராகும் வரை தங்குமிடம், உணவு உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X