பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் வழியாக மும்பைக்கு ரயில்: பல்வேறு தரப்பினர் உற்சாக வரவேற்பு

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: 'கரூர்-ஈரோடு-சேலம் வழியாக இயக்கப்பட்ட, இரு ரயில்களை, கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக இயக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். நாமக்கல் எம்.பி., சின்ராஜூம் வலியுறுத்தினார். இந்நிலையில், 'நாகர்கோவில்-மும்பை வாராந்திர ரயில், திருநெல்வேலி - மும்பை தாதர் சாளுக்கியா வாராந்திர ரயில் ஆகியவை, இரு மார்க்கத்திலும், கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக இயக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி; திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ், திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. நேற்று, நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், நாமக்கல் வழியாக முதல் முறையாக இயக்கப்பட்டது. மதியம், 2:30 மணிக்கு நாமக்கல் வந்த ரயிலை, முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் தலைமையில், தி.மு.க.,வினர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி வரவேற்றனர். பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். கொ.ம.தே.க., தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், தி.மு.க., நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் உள்ளிட்ட, தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X