பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : டிச 03, 2019
Advertisement

சாலையில் பள்ளம்; விபத்து வாய்ப்பு: குமாரபாளையம் அருகே, பச்சாம் பாளையம் அடுத்த மேம்பாலம் முடியும் இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. சங்ககிரியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலை வழியாக, இந்த பள்ளத்தை கடந்துதான் செல்ல வேண்டும். விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதே இடத்தில் தனியார் பள்ளியும் உள்ளதால் மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான இந்த பள்ளத்தை சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுக் கிணற்றுக்கு கம்பிவலை தேவை: மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்., அண்ணாநகர் அருந்ததியர் தெருவில், பல ஆண்டுகளுக்கு முன், பொதுக்கிணறு அமைக்கப்பட்டது. இதுவரை, கம்பி வலை அமைக்கப்படவில்லை. குழந்தைகள் தெரியாமல் எட்டிபார்த்தால், உள்ளே விழுந்து உயிர்பலிகூட ஏற்படலாம். எனவே, விபத்துநேரும் முன்னரே, பகுதியினரின் நலன்கருதி கிணற்றுக்கு கம்பிவளையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தள்ளுவண்டிகளால் ஓட்டுனர்கள் அவதி: நாமக்கல்லில் இருந்து, சேலம், கோவை, திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பூங்கா சாலை, கோட்டை சாலை வழியாக செல்லும் வகையில் ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் கோட்டை சாலை, மெயின் ரோடு சந்திக்கும் இடத்தில், தள்ளுவண்டி கடைகள் வைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

தார்ச்சாலையில் தண்ணீர் தேக்கம்: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட் எதிரில் மீன்கடைகள் உள்ள பகுதியில் அதிக மழைநீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் செல்லும் போது அருகே கடை வைத்திருப்போர் மீது தண்ணீர் தெறிப்பதால் சங்கடத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. மீன் கடை வைத்திருக்கும் நபர்களிடமும் வரி வசூலிக்கும்போது, அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த நீரை அகற்றி, இனியும் தண்ணீர் தேங்காதிருக்க இந்த இடத்தை மேடாக்க வேண்டும்.

எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா? பள்ளிபாளையம், ஆற்றுப்பகுதியில் ஒன்பதாம்படி இடம் மிகவும் ஆழமாக காணப்படும். மேலும் ஆகாயத்தாமரையும் படர்ந்துள்ளது. இங்கு யாரும் துணி துவைக்க, குளிக்க செல்ல மறுப்பர். பாதுகாப்பில்லாத இடமாக உள்ளது. சிறுவர்கள் பலர் இங்கு ஆர்வ கோளாறில் குளிக்க வருகின்றனர். பாறையின் மேலிருந்து குதிக்கின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இங்கு எச்சரிக்கை பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X