பொது செய்தி

தமிழ்நாடு

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டிச., 9க்கு ஒத்திவைப்பு

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கொலை வழக்கில், தீரன் சின்னலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக, நீதிமன்றமே தாமே முன் வந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தது. அதேபோல், யுவராஜின் சகோதரர் தங்கதுரை, கார் டிரைவர் அருண் உள்பட, 10 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவாகியுள்ளது. இவ்வழக்கு, நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் எண், 1ல், நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. யுவராஜ் மற்றும் 10 பேரும், நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி ஜெயந்தி, வழக்கு விசாரணையை, வரும், 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X