பொது செய்தி

தமிழ்நாடு

லயன்ஸ் சங்கங்களின் கூட்டுக் கூட்டம்

Added : டிச 03, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், லயன்ஸ் சங்கங்களின் கூட்டுக்கூட்டம் நடந்தது. குமாரபாளையம், தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், லயன்ஸ் சங்கங்களின் கூட்டுக்கூட்டம், மாவட்ட இணை செயலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலர் இளவரசு கூட்டத்தை துவக்கி வைத்தார். பவானி குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம், டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம், வட்டமலை லயன்ஸ் சங்கம், பவானி குமாரபாளையம் சங்கமம் லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கண் சிகிச்சை, ரத்ததான, ரத்த வகை கண்டறிதல், இருதய சிகிச்சை, பல் சிகிச்சை, பிசியோ தெரபி முகாம்கள் மற்றும் ஒவ்வொரு சங்கத்தாரும் கண்கள் தானம் பெற்று, பயனாளிகளுக்கு வழங்கிய விபரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தனர். இனி வரும் காலங்களில் நடத்தவிருக்கும் சேவைப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். சாதனை படைத்த சங்கங்களுக்கு பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X