பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் எம்.பி.,யிடம் மக்கள் வாக்குவாதம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
ப.வேலூர்: பொன்மலர்பாளையம், காவிரி ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த, நாமக்கல் எம்.பி., சின்ராஜிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, பொன்மலர்பாளையம் காவிரி ஆற்றில், நாமக்கல், கொ.ம.தே.க.,- எம்.பி., சின்ராஜ் நேற்று மாலை, 3:30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடிய மக்கள், 'தேர்தல் முடிந்த பிறகு, இதுநாள் வரை நன்றி தெரிவிக்க கூட

ப.வேலூர்: பொன்மலர்பாளையம், காவிரி ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த, நாமக்கல் எம்.பி., சின்ராஜிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, பொன்மலர்பாளையம் காவிரி ஆற்றில், நாமக்கல், கொ.ம.தே.க.,- எம்.பி., சின்ராஜ் நேற்று மாலை, 3:30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடிய மக்கள், 'தேர்தல் முடிந்த பிறகு, இதுநாள் வரை நன்றி தெரிவிக்க கூட வரவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கிராமத்திற்கு பஸ், சாக்கடை வசதி இல்லை. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது' என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த ப.வேலூர் டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையிலான போலீசார், அவரை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X