பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: ஆகாய கங்கையில் குளிக்க தடை

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலையில், 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மூலிகை கலந்து வருவதால், அதில் குளித்தால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன் காரணமாக, விடுமுறை நாட்களில், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவர். கடந்த சில நாட்களாக, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால், பயணிகள் அருவிக்கு செல்லவும், குளிக்கவும், வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவிகளிலும் குளிப்பதற்கும், கொல்லிமலை ஒன்றிய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X