கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் ரிக் உரிமையாளர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் ரிக் உரிமையாளர் தற்கொலை

Added : டிச 03, 2019

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, கடன் தொல்லையால், மனைவி, மகளுடன் ரிக் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, கூத்தம் பூண்டி பஞ்., சாயக்காட்டை சேர்ந்தவர் மோகன், 55; ரிக் உரிமையாளர் மற்றும் விவசாயி. மனைவி நிர்மலா, 47. மகன் நவீன்குமார், 25. தந்தைக்கு உதவியாக உள்ளார். மகள் சவுமியா, 17; சட்டக்கல்லூரி மாணவி. சில நாட்களுக்கு முன் நவீன்குமார், தொழில் விஷயமாக வெளியூர் சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், மோகனின் தம்பியும், சித்தப்பாவுமான அன்பழகனுக்கு, சவுமியா போன் செய்து, மூவரும் விஷ மாத்திரையை விழுங்கி விட்டதாக கூறியுள்ளார். அவர் பதறியடித்து கொண்டு வந்தார். அங்கு, நிர்மலா இறந்திருந்தார். மற்ற இருவரும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மோகன் இறந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ரிக் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் தொடர் நஷ்டம் ஏற்படவே, மோகன் கடனில் இருந்துள்ளார். அதனால் மனமுடைந்தவர், மனைவி, மகளோடு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வேறு காரணம் உள்ளதா எனவும் விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X