சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர் கையெழுத்தை போட்டு பணம் கையாடல் செய்ததாக புகார்

Added : டிச 03, 2019
Advertisement

நாமக்கல்: பரமத்தி அருகே, பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க, வரவு-செலவு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, இரு மாதங்களுக்கு முன், டிபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்கச் சென்றபோது, சங்கத்தில் பணம் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோல பலரையும் திருப்பி அனுப்பவே, சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, சங்க அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களை நேரில் வரவழைத்து விசாரித்தனர். இதில், வங்கியில் கணக்கு வைத்து உள்ளவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக உறுதி அளித்து, ஒவ்வொருவருக்கும் வங்கி அதிகாரிகள் கடிதம் அளித்ததாக தெரிகிறது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி முடிவடைந்தும் பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பில்லூரை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதையடுத்து, புகார் மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X