நாமக்கல்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாம்பல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43. அவர், நாமக்கல், கருங்கல்பாளையம் பகுதியில் தங்கி சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கருங்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை, கடந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற கார், வெங்கடேசன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement