குமாரபாளையம்: குமாரபாளையம் புறவழிச் சாலை எதிர்மேடு, டீச்சர்ஸ் காலனி எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தொற்று நோய் பரவவும் வாய்ப்புள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து, பகுதியினர் அவதிப்படுகின்றனர். காற்றில் பறக்கும் காகிதங்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க காரணமாகிறது. பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், குப்பையை அகற்றி, சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.