மாவட்டத்தில் 1,685 பொறுப்புகளுக்கு தேர்தல்: 5.33 லட்சம் பேருக்கு ஓட்டு அளிக்க வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 1,685 பொறுப்புகளுக்கு தேர்தல்: 5.33 லட்சம் பேருக்கு ஓட்டு அளிக்க வாய்ப்பு

Added : டிச 03, 2019
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில், 1,685 பொறுப்புகளுக்கு தேர்தலுக்கு, 5.33 லட்சம் பேர் ஓட்டு அளிக்க தகுதி பெற்றுள்ளனர்.தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.,27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராம பஞ்., ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான

கரூர்: கரூர் மாவட்டத்தில், 1,685 பொறுப்புகளுக்கு தேர்தலுக்கு, 5.33 லட்சம் பேர் ஓட்டு அளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.,27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராம பஞ்., ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது. இதன்படி கரூர் மாவட்டத்தில், 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், 115 யூனியன் கவுன்சிலர், 157 பஞ்சாயத்து தலைவர், 1,401 பஞ்., வார்டு உறுப்பினர் என மொத்தம், 1,685 பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், எட்டு யூனியன்களில், இரண்டு லட்சத்து, 79 ஆண்களும், இரண்டு லட்சத்து, 73 ஆயிரத்து, 166 பெண்களும், இதரர், 50 என மொத்தம், ஐந்து லட்சத்து, 33 ஆயிரத்து, 295 பேர் வாக்களிக்க உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X