பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

Added : டிச 03, 2019
Advertisement

கரூர்: உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தில், கல்லூரி மாணவ மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். கரூர், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம் மற்றும் கரூர் கிராமிய தொண்டு நிறுவனம் இணைந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கொண்டாடியது. கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி துவக்கி வைத்தார். மாணவ மாணவியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி சாலையில் மனித சங்கிலி நடத்தினர். அதன் பின், எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாபுநாத், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பேராசிரியர்கள் தீபா, சரவணன், செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* குளித்தலை அடுத்த, தோகைமலை தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக எய்ட்ஸ் தினவிழா, எஸ்.ஆர்.டி.ஓ., சி ஹாய் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்தது. முதல்வர் அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி தலைமை வகித்தார். திருச்சி நீட்ஸ் நிறுவனம் இயக்குனர் மருதநாயகம், நண்பர்கள் சர்வதேச சங்க தலைவர் பூசைமணி, தொண்டு நிறுவன கூட்டமைப்பு நிர்வாகி அசோகன் ஆகியோர் பேசினர். முன்னதாக, விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து எய்ட்ஸ் ஒழிப்பு உறுதி மொழியை மாணவியர், பேராசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் எடுத்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X