பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : டிச 03, 2019
Advertisement

ஆபத்து பயணம்; விபத்துக்கு வாய்ப்பு: கரூர், போலீஸ் லைன் தெருவில் இருந்து மார்க்கெட் செல்லும் ஆட்டோக்களும், ஐந்து ரோட்டில் இருந்து, சி.எஸ்.ஐ., சர்ச் கார்னர் நோக்கிச் செல்லும் ஆட்டோக்களும் தாறுமாறாக செல்கின்றன. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்கின்றனர். குறிப்பாக, ஆட்டோ பின்னால் பயணிகளை உட்கார வைத்து ஆபத்தான நிலையில் அழைத்துச் செல்கின்றனர். இதனால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான பலகை சீரமைக்கப்படுமா? கரூர், சேலம் புறவழிச் சாலையில், போக்குவரத்து விதிகள் குறித்த அறிவிப்பு பலகை பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது. தற்போது, அந்த பலகை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், போக்குவரத்து விதிகள் குறித்து அறிந்த கொள்ள முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கரூர் நகரில் பல இடங்களில் இதுபோல் சேதமடைந்த நிலையில் போக்குவரத்து விதிமுறை போர்டுகள் உள்ளன. அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை மாற்ற வேண்டும்.

சின்டெக்ஸ் தொட்டி பராமரிக்க கோரிக்கை: கரூர், குமரன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், பகுதியினர் தண்ணீர் பிடித்து வருகின்றனர். தற்போது, தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், அன்றாட பயன்பாட்டுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. குழாயை சீரமைத்து, குடிநீர் தொட்டியை மாற்றி வைக்க வேண்டும்.

வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்: கரூர், வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமராவதி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்காலில், கழிவுநீர் மற்றும் குப்பை சூழ்ந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்லும் போது வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரும் கலந்து செல்கிறது. அதனால், நீரை பாசனத்திற்கு பயன் படுத்தினால், சாகுபடிக்கு தகுதியற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை தேங்கியுள்ளதால், சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

குப்பை தேக்கம்; கடும் துர்நாற்றம்: கரூர், வெங்கமேட்டில் சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் ஏற்படும் முன் குப்பையை நாள்தோறும் அள்ள நடவடிக்கை எடுக்க, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், அதிகளவில் குப்பை சேகரிப்பு தொட்டி களை வைக்க வேண்டியது அவசியம் எனவும், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X