வேகத்தடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

வேகத்தடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : டிச 03, 2019

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பேரூராட்சி அலுவலகம் அருகே, வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரவக்குறிச்சி, சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இவ்வழித்தடத்தில் தினசரி பள்ளி பஸ்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை மற்றும் கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இந்நிலையில், வெளியூரில் இருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்ல திடீரென திரும்புகின்றன. அப்போது, எதிர் திசையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி திரும்பும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. இனிமேலாவது, அங்கு எச்சரிக்கை பலகையுடன் கூடிய வேகத்தடை அமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X