பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.11.10 கோடிக்கு பணிகள் தொடக்கம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதி களில், 11.10 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பல்வேறு சாலை மேம்பாடு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதன்படி, காதப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், 2.88 கோடி ரூபாய் மதிப்பிலும், வாங்கப்பாளையம் பள்ளி முதல்

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதி களில், 11.10 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பல்வேறு சாலை மேம்பாடு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதன்படி, காதப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், 2.88 கோடி ரூபாய் மதிப்பிலும், வாங்கப்பாளையம் பள்ளி முதல் முத்துநகர் வரை, 23.70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணிகள், பெரிச்சிபாளையம் ஹனு காலனி பஸ் நிறுத்தம் முதல் குப்புச்சிபாளையம் வரை, 26.30 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை உட்பட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கி இணைய தலைவர் திருவிகா, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கமலகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X