கரூர்: கரூர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவில் அருகில், அமாவாசை போன்ற முக்கிய நாட்களில், காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வருவது வழக்கம். ஆனால், படித்துறை வசதி இல்லை. பெண்கள் உடைமாற்ற அறைகள் இருந்தும், அது சரிவர பராமரிக்கப்படாததால், குழந்தைகள், பெண்கள் பரிதவிக்கின்றனர். ஆற்றில் குளிக்க வழியில்லாமல் சிரமப்படுகின்றனர் இங்கு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு, படித்துறை மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.