காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அவதி| Dinamalar

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அவதி

Added : டிச 03, 2019

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், குடிக்க தண்ணீர் இன்றி, பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. மேலும், தொழில் நகரமான கரூருக்கு, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு ரயிலில் கரூர் வருகின்றனர். இதனால், சில மாதங்களுக்கு முன், முதல் பிளாட்பாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. அதற்காக, தனியாக தொட்டி கட்டப்பட்டு, புதிதாக குழாய்களும் போடப்பட்டன. இதையடுத்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பாட்டிலில் பிடித்து சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொட்டியில் குடிநீர் வருவது இல்லை. இதனால், பொதுமக்கள் ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும், குடிநீர் பாட்டிலை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அமர்ந்து சாப்பிட்டு வந்த அறையும், இரண்டாவது பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பறை, நுழைவு வாயிலில் உள்ள அவசர சிகிச்சை பிரிவும் மூடப்பட்டுள்ளது. ரயில்கள் வந்து செல்வதை உறுதி செய்யும், டிஜிட்டல் தகவல் பலகையும் பழுதடைந்துள்ளது. இந்நிலையில், குடிநீரும் இல்லாமல் கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள தண்ணீர் தொட்டி, காட்சி பொருளாக மாறியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X