சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: சேலம், வன உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானைக்கு, நேற்று மதம் பிடித்து, பாகனை மிதித்து கொன்றது.
மதுரை, அழகர் கோவில் பெண் யானை ஆண்டாள், 68. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால், 2009 முதல் சேலம், ஏற்காடு அடிவாரம் வனத்துறைக்கு சொந்தமான உயிரியியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை சேர்ந்த பாகன் காளியப்பன், 45, பூங்காவில் தங்கி, யானையை பராமரித்து வந்தார். நேற்று மாலை, 5:45 மணியளவில் ஓசூர் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஆண்டாளுக்கு சிகிச்சையளித்துள்ளார். அப்போது, மதம் பிடித்த யானை தும்பிக்கையால், பிரகா ?ஷ, இழுத்துள்ளது. சுதாரித்த பாகன், யானை பிடியில் இருந்து மருத்துவரை விடுவித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, யானை கால்களுக்கு இடையில், காளியப்பன் சிக்கி கொண்டார். ஆக்ரோஷத்தில் இருந்த யானை, பாகனை மிதித்து கொன்றதோடு, உடலை துண்டுகளாக கிழித்து, தும்பிக்கையில் வைத்து கொண்டது. நிலைமையை சமாளிக்க, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தினர். உரு சிதைந்த பாகனின் உடலை சேகரித்து, மூட்டையாக பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது: மதுரையில், ஏற்கனவே மூவரை கொன்று விட்டதால், கோவிலில் வளர்க்க உகந்தது இல்லையென முடிவு செய்து, உயர்நீதிமன்ற உத்தரவுபடி, ஆண்டாள் யானையை உயிரியியல் பூங்காவில் வைத்து பராமரித்து வந்தோம். கடந்த, 2013ல், பெண் துப்புரவு ஊழியரை, கொன்றுவிட்டதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் யானையை வேறு முகாமுக்கு மாற்ற ஏற்பாடு நடந்து வருகிறது. பாகன் குடும்பத்துக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு, உரிய நஷ்டஈடு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X