திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பல்வேறு வீடுகளில் திருடிய இருவர் கைது செய்யப்பட்டு, 110 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி செக்போஸ்ட்டில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெண்ணுடன் ஆண் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவர்களை நிறுத்த கூறியும், நிற்காமல் சென்றனர். போலீசார் விரட்டி சென்று, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்தனர். அவர்கள், சேலம் மாவட்டம், பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த மைதிலி, 36, திருவண்ணாமலை அடுத்த தென்முடியனூரை சேர்ந்த பெயின்டர் முருகன், 40, என தெரிந்தது. இதில், மைதிலி ஏற்கனவே திருட்டு வழக்கில், வேலூர் சிறையில் இருந்தார். அப்போது, அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில், பெயின்டர் முருகன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், இருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜாமினில் வெளியே வந்து, இருவரும் கூட்டாக ஆளில்லாத வீடு, மூதாட்டிகளிடம் நகையை கொள்ளை அடித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து, 110 பவுன் நகை, 1,250 ரூபாய், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மைதிலி மீது மட்டும், 38 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE