திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரவில் பெய்த கனமழையால், அதிகாலை 4 மணியளவில் இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்த இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
முதல் வீட்டில் இருந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் என இருவர் காயத்துடன் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அம்மாவும், மகளும் அடுத்த அறையில் தூங்கியதால் உயிர் தப்பினர், முழுமையாக சேதமான கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE