கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதிய ஆடையில் குறை: சிறுமிக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் உள்ள கடை ஒன்றில் மகாலட்சுமி(11) என்ற சிறுமி, கடந்த 2017 அக்., 16 அன்று தீபாவளியை முன்னிட்டு, அனார்கலி சுடிதார் ஒன்றை ரூ.1000க்கு வாங்கி உள்ளார். ஆனால் சுடிதாரின் டாப் அளவு சரியாக இருந்துள்ளது . பேண்ட் அளவானது சரியாக இல்லாமல் இருந்துள்ளது
இதனால் தீபாவளி அன்று புதிய உடையை மகாலட்சுமியால் அணியமுடியவில்லை. அந்த ஆடையை மாற்றி தருமாறு, கடையை சிறுமி அணுகினார். ஆனால், கடை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமியின் தாயார் கோமதி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தேவதாஸ், சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும், ஆடையை திரும்ப பெற்று கொண்டு ரூ.1,000 த்தை திரும்ப கொடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, நஷ்ட ஈட்டை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா
03-டிச-201916:33:16 IST Report Abuse
Ashwanth சூப்பர் அம்மா . நாலு நபர்கள் இந்த மாதிரி வழக்கு போட்டா அனைவர்க்கும் விழிப்புணர்வு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-201914:10:33 IST Report Abuse
தமிழ்வேல் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
03-டிச-201912:59:36 IST Report Abuse
Rameeparithi சபாஷ் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X