பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தமிழகம், மழை, சென்னை வானிலை ஆய்வு மையம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகம் , புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகரில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ., ராமநாதபுரத்தில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.





அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று 40 முதல் 50 கீ.மீ., வரை வீசக்கூடும். இதனால், குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்.,1 முதல் டிச., 2 வரை 42.செ.மீ., பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 36 சதவீதம் ஆகும். இயல்பை விட 13 சதவீத மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-டிச-201914:14:04 IST Report Abuse
Dr. Suriya இவ்வளவு மழையும் கடல் கரை ஓர மாவட்டங்களில் பாய்ந்து வீணாக கடலில் கலக்கும்... இதை முறை படுத்தி தமிழக உள் மாவட்டங்களுக்கு திருப்பி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொலைநோக்கு பார்வை வேண்டும்... செய்வார்களா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X