பொது செய்தி

தமிழ்நாடு

சாப்பிடவும், அழவும் முடியாத குழந்தை; உதவிக்கு ஏங்கும் பெற்றோர்கள்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Surgery, Danish, NeedHelp, அறுவைசிகிச்சை, உதவி, டேனிஷ்

சென்னை: மூன்றரை வயது குழந்தை டேனிஷ், சாப்பிடக்கூட முடியாத விநோத நோயால் அவதிப்பட்டு வருகிறார். நோயை குணமாக்க முடியாமலும் அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டியும் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

மூன்றரை வயது குழந்தையான டேனிஷ், மற்ற குழந்தைகளை போல உணவு சாப்பிடவோ, பேசவோ முடியாமல் அவதிப்படுகிறார். Treacher Collins Syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் டேனிஷின் முகத்தில் எலும்பு, திசுக்கள் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. இதனால் கீழ் தாடை ஒத்துழைக்காமல் குழந்தையால் தாய்ப்பால் கூட குடிக்க முடியவில்லை. அப்படியே பால், தண்ணீர் குடித்தாலும் மூக்கின் வழியாக வெளியே வந்துவிடுவதாக பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர்.

2 வயதை கடந்த பிறகே இதற்கான அறுவை சிகிச்சை செய்ய முடியும், அதுவரையில் திரவ உணவை மட்டும் வழங்குமாறு டாக்டர்கள் கூறினாலும், அதை கூட டேனிஷால் உட்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. உணவுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாய்க்கு போதுமான இடைவெளி இல்லாததால் மூச்சு விடவும் சிரமப்படுகிறார் டேனிஷ். 7 மாத குழந்தையாக இருந்தபோது இதற்காக ரூ.5 லட்சம் செலவில் Tracheostomy என்ற அறுவை சிகிச்சையின் மூலம் நுரையீரலுக்கு காற்று செல்லும் வகையில் டேனிஷின் கழுத்தில் டியூப் அமைத்தனர்.




கீழ் தாடை சரியாவதற்கான அறுவை சிகிச்சைக்கு ரூ. 5.25 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளதாக டேனிஷின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் கழுத்தில் உள்ள டியூப்பை மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை மாற்றுவதற்கே ரூ.8000 செலவு ஆகிறது எனக்கூறும் பெற்றோர்கள், அறுவை சிகிச்சைக்கு இவ்வளவு பணம் வேண்டுமே என உதவிக்கரம் வேண்டி காத்திருக்கின்றனர்.


உதவி செய்ய விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் சென்று உதவலாம்


https://www.edudharma.com/fundraiser/without-surgery-my-son-will-not-be-able-to-eat-or-talk-5

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201908:37:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உதவுவதற்கு உதவியதற்கு நன்றி. உதவியர்களில் ஒருவரின் வாசகம். உனக்கான வாழ்வு உனக்கே அளிக்கப்படும். அன்பால் அவன் கஷ்டங்களை குறையுங்கள். நல்லதே நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X