சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலி: வீட்டின் உரிமையாளர் கைது

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்,சுற்றுச்சுவர், உரிமையாளர்

இந்த செய்தியை கேட்க

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, உறவினர்களான ஆனந்தகுமார், 40, அருக்காணி, 45, சிவகாமி, 50, ஓவியம்மாள், 50, ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. காய்கறி மண்டிகளில் கூலி வேலை பார்க்கும், இந்த நான்கு குடும்பத்தினரும், 'ஹாலோ பிளாக்' கற்களில் சுவர் எழுப்பி, அதன் மீது ஓடு வேய்ந்து, வசித்து வந்தனர்.முன்தினம் இரவு முதலே, கன மழை பெய்ததால், உறவினர்கள் அனைவரும், வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த திலகவதி, 38, என்பவரும், இவர்களது வீட்டில் படுத்திருந்தார். மொத்தம், 17 பேர், நான்கு வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தனர். இவர்களது வீடுகளின் பின்புறம், 'சக்கரவர்த்தி துகில் மாளிகை' ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம், 66, என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய, கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது.


கோவை, மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே அவுட்டில் கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின்மேல்விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த உரிமையாளர் சிவசுப்ரமணியன்மீது விபத்து ஏற்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

latest tamil newsகன மழை காரணமாக, ஓடைகளிலும், பள்ளங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, சுப்பிரமணியத்திற்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சிவசுப்பிரமணியன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில், சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
04-டிச-201919:14:03 IST Report Abuse
ராஜேஷ் நம்ம செய்றே வேலை அடுத்தவரை பாதிக்க கூடாது என்பதை மனதில் கொள்ளனும். சுவர் எழுப்பியவருக்கு சனி விளையாட ஆரம்பித்தது . எப்படி பேனர் அடிச்சுக்குடுத்த கடைக்காரரை பாதித்ததோ அதே மாதுரி தன இதும் பணக்காரர்கள் ஏழைஜனங்களை புழு பூச்சியாகத்தான் பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் .
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
04-டிச-201916:23:29 IST Report Abuse
S.P. Barucha தாழ்த்தப்பட்ட சாதியினரை தவிர வேறு யாரும் ஓட்டு போடக்கூடாது. சாதி அடிப்படையில் வழக்கு போடுவதை முதலில் ஒழிக்க வேண்டும், அந்த சட்டத்தையும் ஒழிக்க வேண்டும். எஸ்.சி சாதியினருக்கு அதிக சலுகை எல்லா துறைகளிலும் கொடுத்து நாட்டின் அணைத்து துறைகளும் நாசமாகிவிட்டது.திறமையானவர்கள் எல்லாம் நாட்டிற்கு இல்லாமலே செய்து விட்டது இந்த சாதி ஒதுக்கீடு.
Rate this:
Anandan - chennai,இந்தியா
05-டிச-201900:34:58 IST Report Abuse
Anandanஇது போன்ற மூடத்தனமான கருத்துகளை இன்னும் போடுறானுங்க....
Rate this:
Murugesan Rengasamy - Abu Dhabi,இந்தியா
05-டிச-201910:46:06 IST Report Abuse
Murugesan Rengasamyதரம் தாழ்ந்த பதிவு. இட ஒதிக்கீடு எத்தனை சதவீதம் என்று தெரியுமா உங்களுக்கு. 18 % மட்டுமே அவர்களுக்கு ..... மீதம் உள்ள 82 % (18% for SCs, 1% for STs, 30% BC and 20%MBC (69% total)) மற்ற பிரிவினருக்கு என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ...... நீங்களும் இட ஒதுக்கீடு மூலம் வந்தவர்கள் தான் என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள் ...... நாட்டில் நடக்கிற ஊழல் மொத்தம் யார் செய்தது என்று கொஞ்சம் கண் திறந்து பாருங்கள் .... கண் மூடித்தமாக பதிவு போட வேண்டாம்...
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
04-டிச-201905:25:11 IST Report Abuse
Citizen_India உயிர் இழந்த அனைவரின் ஆத்மா சாதி அடைய ஆண்டவர் அருள் புரிடட்டும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சுவர் பக்கத்துல வீடு கட்ட யார் அனுமதி கொடுத்தது. சுவர் காட்டியது தவறுன்னா, சுவர் பக்கத்துல வீடு காட்டியது சரியா? இயற்கை சீற்றத்தால் சுவர் விழுந்த மனுஷன் என்ன செய்வான்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-டிச-201911:10:35 IST Report Abuse
pradeesh parthasarathyஎன்ன செய்வது... கட்டியது தீண்டாமை சுவர் ஆயிற்றே....அதை ஊடகங்கள் மறைக்கின்றன... யாராவது பதினைந்து ஆதி உயரத்தில் சுவர் காட்டுவார்களா..? அரசு கொடுத்திருக்கும் அனுமதி ஐந்து முதல் எட்டு... இது தீண்டாமை சுவர் .....
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
05-டிச-201911:49:00 IST Report Abuse
TamilArasanயோவ் அந்த ஆள் படுகா இனமாம் அது மலைஜாதி இனத்தை குறிக்கும் - சட்டப்படி அவர் நீங்கள் கதறும் தீண்டாதவர்களை விட கீழ் நிலை ஜாதி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X