சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டம் முடுக்குப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி வயது 35. திருமணமாகவில்லை. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று(டிச.,3) காலை 7:30 மணி அளவில் , அரசு மருத்துவமனையில் 6வது மாடிக்குச் சென்ற கணேசமூர்த்தி, மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதாமணி கூறியதாவது :மஞ்சள் காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த கணேசமூர்த்தி, கோவையில் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து குவைத் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.இன்று காலை ஏழு முப்பது மணி அளவில், அவருடன் இருந்த தந்தையை உணவு வாங்கி வரச் சொல்லி அனுப்பிவிட்டு, மாடியில் இருந்து குதித்து இருக்கலாம்.
வீட்டில் வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், வெளிநாடு வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்திருக்கலாம். மன நலம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி அவரிடம் இல்லை.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X