பொது செய்தி

இந்தியா

ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ராம்விலாஸ் பஸ்வான்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (15)
Advertisement
OneNation_OneRationCard, RamvilasPaswan, June1, Minister, ஒரேநாடு_ஒரேரேஷன், ராம்விலாஸ்_பஸ்வான், ஜூன்1, மத்தியஅமைச்சர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பார்லி., கூட்டத்தொடரில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது: 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இத்திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவு பொருட்களை பெறலாம். சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் ஆகியோருக்கு இந்த திட்டம் உதவும்.





அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தேவையான செயல்திட்டத்தை உருவாக்க மற்றும் சர்வதேச தரத்துக்குத் தேவையான வழிகளையும் ஆய்வு செய்ய இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி என்ன கணிசமான அளவில் வட இந்திய முட்டாள்களை தமிழகத்தில் இறக்குமதி செய்தாயிற்றா. இந்த வடமாநிலத்தவர் இல்லை எனில் டாஸ்மாக் நாட்டில் வீடுகட்டும் தொழில் என்றோ முடங்கி இருக்கும். அனைகமாக எல்லா பெரிய பெரிய துணிக கடைகளிலும் இவர்கள் கடினமாக ஒழுங்காக வேலை செய்கிறார்கள். அதே மாதிரி சாலை ஓர ஓட்டல்களிலும் எல்லா வேலையையும் குறைந்த ஊழியத்தில் வேலை செய்வதால் முதலாளிகள் ஓரளவு காசு பார்க்க முடிகிறது. டாஸ்மாக் தமிழன் கழகங்கள் தரும் குவாட்டரும் பிரியாணியும் சுவைத்துவிட்டு அவன் செய்யும் சாலைமறியல் மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டு தமிழகத்தில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்கிறான்.அவனது குடும்பம் ரேஷன் கடையில் கால் கடுக்க நின்று இலவச அரிசி பாமாயில் முதலியவைகளை வாங்கி அவனுடைய குடும்பத்தை உயிர் வாழ வைக்கிறது. இப்படியாக திரவிடர்கள் பல தலைமுறைகளை சீரழித்து விட்டார்கள். ஏதோ வட இந்திய தொழிலாளர்களால் தமிழகம் நல்லபடியாக போய் கொண்டுள்ளது. இதில் முட்டாள் வட இந்தியர்களாம். எப்படி இருக்கிறது டாஸ்மாக் தமிழனின் எண்ணம்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
04-டிச-201900:04:56 IST Report Abuse
Rajas நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தொகை பெருகவே இது வாய்ப்பளிக்கும். உதாரணத்திற்கு வட இந்தியர்கள் பெரும்பகுதியினர் தென்னிந்தியாவிற்கு பிழைப்பு தேடி வருகின்றனர். இப்போது அவர்களுக்கு கோதுமை தேவை. கோதுமை இங்கே விளையாது. கோதுமை விளைவிக்க கூடிய வட இந்தியாவில் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு ஆட்கள் போனதால் கோதுமை விவசாயம் செய்ய அங்கே ஆட்கள் இல்லை. அடுத்தது தென்னிந்தியாவில் வந்த வட இந்தியர்கள் காலப்போக்கில் அரசி உணவு எடுத்து கொள்கின்றனர். அந்த அளவிற்கு அரிசி விளைவிக்க இங்கே இடம் இல்லை. வட இந்தியாவின் சீதோஸ்த்தன நிலைக்கு அரசி விளைச்சல் குறைவு. என்ன செய்வது. இதை போல பருப்பு, எண்ணெய், காய்கறி என வைத்து கொள்ளலாம்.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-டிச-201908:52:11 IST Report Abuse
ஆரூர் ரங்அரிசி உற்பத்தியில் முதலிடம் மேற்கு வங்கம் அடுத்து உத்தர பிரதேசம் பஞ்சாப் பிஹார் சத்தீஸ்கர் ஒரிஸா ஹரியானா. நாம் வெறும் நான்காமிடம்தான்...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
04-டிச-201911:44:12 IST Report Abuse
Rajasஅவர்களின் அரிசி எந்த வகை அதாவது சாதாரண சமையலுக்கு ஒத்து வராத பாசுமதி, போன்ற வகைகள் எவ்வளவு. அதில் ஏற்றுமதி எவ்வளவு ஆகிறது....
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
03-டிச-201923:55:49 IST Report Abuse
Rajas பல வருடங்களாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சராகி விடுகிறார். மேலே என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேள்வியே கேட்காமல் நிறைவேற்றி தருபவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X