பொது செய்தி

இந்தியா

உணவில் எலி; மாணவர்கள் மயக்கம்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (16)
Advertisement
Mouse, School, UP, உபி, சத்துணவு, எலி, சாம்பார், மாணவர்கள்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட சத்துணவில் செத்த எலி மிதந்தது. இதை அறியாமல் சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மயக்கமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவியது. இந்நிலையில், முசாபர்நகர் மாவட்டத்தில் ஹாபூர் நகரில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று (டிச.,03) மதியம் அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்ட போது, அதை சாப்பிட்ட 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் மயக்கமடைந்தனர். இது தொடர்பாக விசாரிக்கையில் சத்துணவு பருப்பு சாம்பாரில் செத்த எலி ஒன்று மிதந்தது கண்டறியப்பட்டது.





மயக்கமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கல்வி அதிகாரி ராம் சாகர் திரிபாதி கூறுகையில்; இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். ஜன் கல்யாண் சன்ஸ்தா விகாஸ் கமிட்டி தான் மதிய உணவு திட்டத்திற்கு உணவு தயாரிக்கிறது.
பருப்பு சாம்பாரில் எலி இருந்ததால் உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனையில் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். இது கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். சம்பந்தப்பட்ட கமிட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
03-டிச-201919:40:54 IST Report Abuse
 Muruga Vel உத்திர பிரதேசத்தில் பருப்பு சாம்பாரா .. பீகாரில் கோசி நதியோர மக்கள் மழை காலங்களில் எலியை உணவாக உண்கிறார்கள் ..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-201920:48:47 IST Report Abuse
தமிழ்வேல் தமிழ்நாட்டிலும் (வயல்) எலி சாப்பிடுவார்கள்... வயல் எலி தானியத்தை தன் வலையில் சேர்த்து வைத்து தின்னும்....
Rate this:
Share this comment
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
03-டிச-201919:17:22 IST Report Abuse
NewIndia_DigitalIndia அம்பானி உலக பணக்காரன் ஆனா போதும் வேறு எது பத்தியும் கவலை இல்லை .
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
03-டிச-201918:54:43 IST Report Abuse
ANANDAKANNAN K UP அரசு வெட்கி தலை குனிய வேண்டும், ஒரு சில எலி விஷத்தன்மை கொண்டது அதை சாப்பிட்டால் உயிர்க்கு ஆபத்து வரலாம், இதுவும் குழந்தைகள் விஷயத்தில், சாப்பாடு செய்யும் பணியாளர்கள் கவன குறைவால் வந்த வினை, மேலும் சத்துணவு அமைப்பாளர் கண்காணிக்க வேண்டியது அவரது பணி, இவரை கண்காணிக்க வேண்டியது தலைமை ஆசிரியரின் கடமை, அப்போ சமையல் பணியாளருக்கு பனியின் நோக்கமே தெரியவில்லை , உயர் அதிகாரிகளுக்கு இவர்கள் கட்டுப்படுவது இல்லை என்று தானே அர்த்தம், அப்படி இருந்து இருந்தால் இந்த மாதிரியான கவனக்குறைவுகள் வராது, தப்பு செய்தல் தண்டனை கிடைக்கும் என்று இருந்தால் இந்த சம்பவம் இருக்காது, அலட்சியம் எந்த இடத்தில இருந்தாலும் அதை விரட்ட வேண்டும்,மேலும் எலிகள் வரும் அளவுற்கு உணவு சேமிப்பு கிடங்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என்று தானே அர்த்தம். அப்படி ஆட்சி செய்த மாய மற்றும் அகிலேஷ் பதவி இழந்தார்கள் இப்போ இந்த யோகி சாமியாரும் அந்த பட்டியலில் சேர்வார்போல் தெரிகிறது.இன்னமும் இந்த யோகி கு காலம் இருக்கு இதுபோல் நடக்காத வண்ணம் பார்க்கலாம் அதை விட்டு நான் எதையும் பார்க்க மாட்டேன் என்றால் முன்னாள் என்றால் பெயர் மட்டுமே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X