பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் இபிஎஸ் ஆய்வு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மேட்டுப்பாளையம், இபிஎஸ், ஆய்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் வீடு இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த சம்பவம் நடந்த இடத்தை முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் இபிஎஸ் நிருபர்களிடம் பேசுகையில் ;
இறந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்
இந்த பகுதியில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. மழை காரணமாக நடூர் காலனியில் மதில்சுவர் இடிந்து 3 வீடுகளும் தரைமட்டமாகின. 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்ததும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. மதில்சுவர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.4 லட்சமும், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6 லட்சமும் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும். இறந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இழந்தோருக்கு வீடுகள் கட்டி தரப்படும். தமிழகத்தில் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆண்டு இலக்கின்படி வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படும். இவ்வாறு முதல்வர் இபிஎஸ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-டிச-201918:22:23 IST Report Abuse
A.George Alphonse நல்லது.இனியாவது இறந்தவர்களின் வாரிசுகள் சுகமாக வாழட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X