சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

Updated : டிச 04, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
Chidambaram,Supreme court,சிதம்பரம், ஜாமின், கிடைக்குமா? தீர்ப்பு,p chidambaram,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, சுப்ரீம் கோர்ட் இன்று (டிச.,4) தீர்ப்பு வழங்குகிறது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, கடந்த ஆகஸ்ட் 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். பின், அவர் டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது.


latest tamil news



ஆனால், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், சிதம்பரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் 100 நாட்களுக்கும் மேல் சிதம்பரம், திஹார் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-டிச-201910:11:32 IST Report Abuse
ganapati sb palavarudam mathiya amaicharaaga irunthu thanathu thoguthiyana sivagangaiyai singapuraga maatriya chithambaram siraiyil pallandu vaalga
Rate this:
Share this comment
Cancel
vijay,covai -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201906:23:50 IST Report Abuse
vijay,covai செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு முழிக்கரத பாருங்க
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
04-டிச-201905:24:46 IST Report Abuse
 N.Purushothaman சுல்தான் கடலை கான் ஏன் இன்னமும் இவரை ஜெயில்ல போயி பாக்கல ? சந்தேகமா இருக்கே ...🤔🤔🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X