காலநிலை மாற்றம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மாட்ரிட் : காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் மாசுபாடு குறித்தும் காலநிலை மாற்றங்கள் குறித்தும் உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஐ.நா சபை காலநிலை மாற்றம் குறித்த மாநாடு ஸ்பெயினில் நேற்று (டிச.,2) துவங்கியது. டிச., 16 வரை நடக்கும் இந்த மாநாட்டில், பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் அதை வலுப்படுத்துதல் பற்றியும், உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பைக் குறைப்பது குறித்தும், ஐ.நா முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்துக்கான விலையை கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.


பிரேசிலில் நடக்கவிருந்த மாநாடு சில மாதங்களுக்கு முன் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு மாற்றப்பட்டது. பசுமை வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும். கார்பன் நடுநிலைமையை 2050-க்குள் கொண்டு வரவேண்டும். கார்பன் வெளியேற்றத்தை தடுப்பன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை காற்று மாசுபாட்டிலிருந்து உலக நாடுகள் தடுக்க முடியும் என்று ஐ.நா சபை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் சுற்றுச்சூழல் இயக்குனர் மரியா மாசுபாடு குறித்தும் அதன் பாதிப்புகளின் தன்மை குறித்தும் விளக்கினார்.

அவர் கூறியதாவது : தற்போது நாட்டில் மாசுபாட்டின் தன்மை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டது. காலநிலை நெருக்கடிக்கான விலையை மனித இனம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற முக்கிய நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து பல பேராபத்துகளை உண்டாக்கும். எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்றார்.

இதுகுறித்து ஐ.நா சபை தலைவர் அன்டோனியா கட்ரீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ''உலகிலுள்ள அனைத்துத் தலைவர்களும் தங்களது பொறுப்பையும் பங்களிப்பையும் இந்த மாநாட்டில் அளிக்கவேண்டும். இந்தக் காலநிலை மாற்றத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் துரோகமாக அது அமையும். மனித இனம் பூமியுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது பூமி மீண்டும் போராடுகிறது. காலநிலை மாற்றம் உலகளாவிய காலநிலை அவசரநிலையாக மாறியுள்ளது" என்று பதிவிட்டார்.

தொடர்ந்து, காலநிலை மாற்றம் குறித்த விளைவுகளை கருத்தில் கொண்டு, அதற்கு தகுந்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-201921:53:19 IST Report Abuse
நக்கல் எதிர்காலத்தில் சென்னை போன்ற நகரங்கள் மூழ்கும் அபாயம்.... ஏங்க இப்படி எங்க கழகங்களை பயமுறுத்தறீங்க... ஒருத்தர் ரெண்டு பேர் போனா 10 லட்சம் கொடுக்கலாம்... பலருக்கு ஆபத்துன்னா அவங்க கிட்ட அவ்வளவு பணம் இல்ல...
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-டிச-201919:38:25 IST Report Abuse
Sampath Kumar ஏச்சரிச்சு என்ன பிரயோசனம் எங்க ஊரு காரன்க இதை எல்லாம் கண்டுக்க மாடங்கே அவனுக்கு அடுத்தவன் வீட்டில் குப்பை போடுவது கழிவு நீரை திறந்து விடுவது என்று அடிக்கிகிட்டயே போகலாம் என்ன செய்ய எங்க மக்கள் புத்தி அம்புட்டுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X