பொது செய்தி

தமிழ்நாடு

மரணிக்காத மனிதநேயம்; தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (41)
Advertisement
மனிதநேயம்,கண்தானம்,சுவர்,17 பேர் பலி,பிள்ளை,தந்தை

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சோக சம்பவத்திலும், இறந்த தன் இரு பிள்ளைகளின் கண்களையும், தானம் செய்த தந்தையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - நடூர் கண்ணப்பன் லே-அவுட்டில், கனமழையால், சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய, கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், அருகிலிருந்த வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாயினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் இந்த சோக சம்பவத்திலும், இறந்த தன் இரு பிள்ளைகளின் கண்களையும் தானம் செய்த, தந்தையின் மனித நேயம் காண்போர் நெஞ்சை நெகிழ வைக்கிறது. டீக்கடை நடத்தி வரும் செல்வராஜ் என்பவர், கல்லூரியில் படிக்கும் தனது மகள் நிவேதாவையும், 10ம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதனையும் இவ்விபத்தில் பறி கொடுத்தார். டீக்கடையில் தங்கியதால் செல்வராஜ் மட்டும் உயிர் பிழைத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே தன் மனைவியை இழந்த செல்வராஜ், இவ்விபத்தில் பிள்ளைகளையும் பறிகொடுத்து தனி மனிதரானார்.





மருத்துவமனையில், குழந்தைகளின் கண்களை கொண்டு இருவருக்கு பார்வை அளி்க்கலாம் என டாக்டர்கள் கூற, அதற்கு செல்வராஜ் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிள்ளைகளின் 4 கண்களையும் தானம் வழங்கினார். தீராத சோகத்திலும் தன் குழந்தைகளின் கண்களை தானம் செய்த தந்தையின் செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201910:40:38 IST Report Abuse
Sivakumar Subbian ஐயா உங்களை நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.இந்த நிகழ்வு எனக்கு ஒரு மிக பெரிய அளவில் ஊக்கம் அனைவருக்கும் உதவ வேண்டும் எந்த நிலையிலும்.
Rate this:
Share this comment
Cancel
gokul - calagary,கனடா
05-டிச-201905:54:53 IST Report Abuse
gokul ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை. உங்களை போன்ற மனித நேயம் உள்ள மக்களால் தான் இந்த உலகம் ஓடி கொண்டு இருக்கிறது.அன்பு குழந்தைகளை இழந்து வெல்லும் உங்களுக்கு அந்த கடவுள்தான் ஆறுதல் படுத்த அருள் புரிய வேணும்.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
05-டிச-201903:50:59 IST Report Abuse
Ray ஏழு நற்குணங்கள் - ஏழ்மையிலும் நேர்மை கோபத்திலும் நிதானம் தோல்வியிலும் விடாமுயற்சி துன்பத்திலும் தைரியம் வறுமையிலும் பரோபகாரம் செல்வத்திலும் எளிமை பதவியிலும் பரிவு உயர்ந்த மனிதர்கள் ஓலை குடிசையிலும் உள்ளனர் இந்த உயர்ந்த உள்ளத்தை உலகுக்கு காட்டிய நிகழ்வு நாலு லக்ஷம் பத்து லக்ஷமெல்லாம் எங்கே கோடிகள் பெரும் உதவியை சர்வ சாதாரணமாக செய்துள்ளார் இறைவன் அவருக்கு மன தைரியத்தை வழங்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X