சென்னை: சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்று(டிச.,3) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சேலத்தில் உள்ள காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் படிக்கும், 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள் சேலத்திலிருந்து சென்னைக்கு 'டூர் ஜெட்' விமானத்தில் இலவசமாக அழைத்து வரப்பட்டனர். சென்னையில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். முதன்முறையாக விமானத்தில் பறந்தது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Advertisement