மேலும் பல சீர்திருத்தங்கள்: நிர்மலா அறிவிப்பு

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (62)
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: மத்திய அரசு மேலும் பல சீர்திருத்த திட்டங்களை அறிவிக்க இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெறும் இந்தியா - ஸ்வீடன் வணிக மாநாட்டில் பங்கேற்று அவர் கூறியதாவது: முதலீட்டை அதிகளவில் ஈர்ப்பதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது. முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கார்ப்பரேட் வரியை குறைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.





இந்திய அரசு, வங்கி, சுரங்கம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்காக, இந்தியா திட்டமிட்டு வருகிறது.
மேலும் தேவையை அதிகரிப்பதற்காக, தனிநபர் வருமான வரி குறித்து, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரிச்சலுகைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
04-டிச-201915:41:25 IST Report Abuse
Karthik இப்பொழுதே நிதி பற்றாக்குறை, பிறகு எதற்கு கார்பொரேட்க்கு வரி குறைப்பு? வரி அதிகப்படுத்தினால், அதன் மூலமாக (வெளிநாடுகளிலிருந்து) நிதி வருமே?
Rate this:
Share this comment
Cancel
04-டிச-201915:38:49 IST Report Abuse
கதை சொல்லி கள்ள கணக்கெழுதி வரி ஏய்ப்பு செய்திடவும் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் என்கான்ஸ்மன்ட் பெற்றுக்கொண்டே இருந்திட வழி செய்யுங்கள் போதும் இந்திய பொருளாதாரம் புலியாய் பாயும்.
Rate this:
Share this comment
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
04-டிச-201915:24:24 IST Report Abuse
mariyappangopinathan கார் கடனுக்கு 6 சதவீதம் வட்டியும் கல்வி கடனுக்கு 12 சதவீதம் வட்டியும் கொடுக்கும் வரை படிப்பறிவில் தாங்கள் முன்னேற்றம் அளிக்க முடியாது. கார் வாங்குபவன் பண வசதி உள்ளவன். ஆனால் கல்வி கடன் வாங்குபவன் இரு சக்கர வண்டியை second hand ல் வாங்குபவன். யாருக்கு வட்டியை குறைத்து அளிக்க வேண்டும்னு முதல்ல யோசிங்க. சும்மா பந்தா காட்ட திட்டம் தீட்டத்தீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X