அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சுவர் இடிந்து இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 சுற்றுச்சுவர் இடிந்து இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு

கோவை : ''சுற்றுச்சுவர் இடிந்து பலியானோருக்கு, தமிழக அரசு அறிவித்த, தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானதல்ல; அந்த தொகையை, அதிகரித்து வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

''தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட்டில், ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்ததில், 17 பேர் பலியாகினர்.நேற்று காலை, 11:00 மணிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இடிந்த வீடுகளை பார்வையிட்டதுடன், பலியானோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது:சுற்றுச்சுவர் பழுதடைந்துள்ளது என, இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், 17 பேர் உயிரிழந்து உள்ளனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, போராட்டம் நடத்திய உறவினர்களை, கண் மூடித்தனமாக, போலீசார் தாக்கியுள்ளனர். நடவடிக்கைஇதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு, தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவித்து உள்ளது. இது போதுமானதல்ல, தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு, அரசு வேலை கொடுக்க வேண்டும். வீடு கட்டித் தர வேண்டும். விபத்துக்கு காரணமானவரை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை, 4:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:மேட்டுப்பாளையத்தில், 18 செ.மீ., அளவு மழைபொழிவு இருந்தது. இதன் காரணமாக, நடூர் பகுதியில், மூன்று வீடுகளை ஒட்டியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த, 17 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியன் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளார்.
புதிய வீடுஉயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, தலா, 4 லட்சம் ரூபாய், முதல்வர் நிதியில் இருந்து, தலா, 6 லட்சம் ரூபாய் என, மொத்தம், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இடிந்த வீடுகளுக்கு பதில், புதியதாக வீடு கட்டித்தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தினரில் தகுதியானவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை, குடிசை இல்லா மாநிலமாக மாற்ற முடிவெடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்பவர்களுக்கு, வீடுகள் கட்டித்தரப்படும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை, அரசியலாக்கப் பார்க்கிறார். சுவர் குறித்து, ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-டிச-201902:25:58 IST Report Abuse
B.s. Pillai The loss of life is definitely deplorable, but it is mainly due to Natural calamity. The people used the collapsed wall as one side wall of their huts which is against the rules. What they were doing on their portion such as driving nails and hanging heavy items can weaken the strength of the wall. Why Govt. should give donation to this ? The government can punish the erring officials for closing their eyes for unauthorised construction.When Rajiv Gandhi allotted apartments to the slum dwellers in Mumbai, these people sold it to others and returned back to their slums. They want Govt. money somehow or other.This practice of paying from Govt funds should be on most fitting cases only.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
04-டிச-201917:25:10 IST Report Abuse
Jaya Ram இத்தமிழ் நாட்டில் ஒரு பிணம் விழக்கூடாது அதுவும் தலித் பிணமாக இருக்கக்கூடாது ஏற்கனவே 1 1/2 வயதுடைய குழந்தை அவர்களின் சொந்த போரெவெள்ளில் விழுந்ததற்கே 40 லட்சம் பணம் கிடைத்துள்ளது அக்குடும்பத்திற்க்கு அத்துடன் தமிழக மக்கள் நிம்மதியாக பண்டிகை நாளை கொண்டாட விடாமல் இந்த டி வி க்கள் படுத்திய படு இருக்கிறதே சொல்லமுடியாது, இப்போ இங்கே ஒருவர் ஒரு பிணத்திற்கு 4 லட்சம் போதாது என்று கூவி விட்டு சென்றார் உடனே பின்னால் வந்த முதல் மந்திரியோ ஒரு படி மேலே போய் இன்னும் 6 லட்சம் முதல்வர் நிதியில் இருந்து தருகிறாரம் அது போக குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலையாம் என்னப்பா நியாயம் இவர்களின் அரசியல் சித்து விட்டிற்கு பொதுமக்களின் பணமும் வேலைவாய்ப்பகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருக்கும் சிலரின் வேலைவாய்ப்பும் அநியாயமாக பறிக்கப்படுகிறது இதை போல் ஒரு நிகழ்வினை வேறெந்த நாட்டிலும் காண முடியாது. சரி அந்த சமூக மக்கள் வசிக்கும் இடத்தின் ( பல்வேறு இடங்களில் ) அருகில் வசிக்கும் மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் சொல்லமுடியாது, எனக்கு தெரிந்த ஒரு ஏரியா இவர்கள்லை மொத்தமாக வசிக்கிறார்கள் இவர்களின் அருகில் ஒரு தெரு சென்று முடிகிறது ஏனென்றால் இவர்கள் பகுதி தனி இடம் அந்த தெரு தனி இடம் ஆனாலும் தெருவின் தொடர்ச்சியாக அவர்கள் பகுதியில் போக முடியாது ஏனென்றால் அது 5 அடி அளவுள்ள குறுகிய சந்து ஆனால் இதெருவோ முறையாக இருபக்கத்து இடத்துக்காரர்களாலும் சரிசமமாக விடப்பட்டுள்ள 20 அடி அகலமுள்ள தெரு முன்னர் இவர்கள் அந்த தெருவில் வருவதில்லை ஆனாலும் அங்கு குறுக்கே எந்த சுவரும் இல்லை படிப்படியாக அவர்கள் இத்தெருவில் போக வர ஆரம்பித்தார்கள் அதெருமக்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கடந்த பத்தாண்டுகளாக தெருவில் வெளியே செருப்பு போடமுடிவதில்லை தூக்கிசென்றுவிடுகிறார்கள் , வண்டிகள் நிறுத்தியிருந்தால் பெட்ரோல் களவாடி விடுகிறார்கள்,இரவு நேரங்களை காற்றுக்காக ஜன்னல் திறந்து வைத்து தூங்க முடியாது காரணம் ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பது உள்ளே கல்லை போடுவது போன்றவை நடக்கின்றன கதவை திறந்து வருவதற்குள் ஓடி விடுவது அல்லது எதுவும் தெரியாத மாதிரி பேசிக்கொண்டு இருப்பது போல் பாவனை செய்வது, ஏனென்றால் அங்கு வசிக்கும் மக்கள் வன்முறை ஜாதியினர் இல்லை பலஜாதி மக்கள் உழைப்பை ஒன்றை கொண்டே வாழ்பவர்கள் எதிர்த்து கேட்பவர்களை கும்பலாக தாக்குவது அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாதிசலுகையினை பயன்படுத்தி போலீசில் புகார்கொடுத்து வீணாக அழையவிடுவது இதனால் அவர்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் போவது போன்ற நிகழ்வுகள் இன்றளவும் நடக்கின்றன ஆனாலும் அம்மக்கள் இவற்றினை கண்டு கொள்ளாமல் ஜன்னல்களையும் , கதவுகளையும் அடைத்துக்கொண்டுதான் தூங்குகின்றனர் இப்படியான சமூகத்திற்கு அள்ளிக்கொடுக்கும் இந்த கட்சிகளை புறக்கணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன், இந்த நாட்டில் எவனாவது செத்தால் அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் நிதியும் கிடைக்கும் இதுவே அப்படியான சமூகம் என்றல் கேட்கவேவேணாம் , ஒட்டு கிடைக்கக்கூடிய சமூகத்திற்கு லாபம் மற்ற சமூகங்களுக்கு பட்டை நாமம்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-டிச-201915:55:54 IST Report Abuse
Pannadai Pandian Ask sudalai to go to hell, EPS is doing the best. What more the government can give ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X