நக்சலிசத்தின் முதுகெலும்பை பா.ஜ., உடைத்துள்ளது: மோடி

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (12)
Advertisement
BJP_govt, broke,backbone,Naxalism,Modi,PM,B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

ஜாம்ஷெட்பூர்: பா.ஜ., ஆட்சியில் நக்சலிசத்தின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 20 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஹூண்டி பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜார்க்கண்ட்டில் நடந்த முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிவில் 3 விஷயங்கள் தெளிவாகின்றன. முதலாவது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஜார்கண்ட் மக்களின் நம்பிக்கையும், முன் எப்போதும் இல்லாத வகையில், நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் தெரிகிறது.

இரண்டாவதாக, பா.ஜ., ஆட்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களின் முதுகெலும்புகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், இங்கு அச்சப்படும் சூழல்கள் குறைந்து வளர்ச்சிக்கான சூழல் உருவாகி உள்ளது. மூன்றாவதாக, ஜார்கண்ட் மக்களுக்கு, பா.ஜ., மற்றும் தாமரை சின்னம் மீது நம்பிக்கை உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்னை, அயோத்தி விவகாரத்தில் முந்தைய காங்., அரசு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ., ஆட்சியில் இதற்கு சுமூக தீர்வு எட்டப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-டிச-201913:04:28 IST Report Abuse
இந்தியன் kumar வேலைவாய்ப்பு அதிகரிக்கும் போது நக்சல்கள் குறைவார்கள், வரி கட்டாதவர்கள் எல்லாம் வரி கட்டுகிறார்கள் நாடு விரைவில் சுபிட்சம் அடையும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-டிச-201913:02:38 IST Report Abuse
இந்தியன் kumar வருடம் முழுவதுவும் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது .ஐந்து வருடத்தில் இரண்டு தேர்தல்கள் என்பது ஓரளவு தீர்வாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
04-டிச-201903:33:55 IST Report Abuse
B.s. Pillai It is true that because of Mr.Modi's demonetisation, the Naxals had become poor overnight and was unable to buy weapons to kill public and the Police. Same way, it gave positive results in stopping stone throwing on our Army soldiers. These soldiers are responsible for each of us to sleep peacefully in our homes.But how many of us give and show our respect to them, when we see them on the raod ? how many of us saluted them for hteir valour ? How many of us had donated liberally on Flag Day ? If not done till now, at least now we can start doing it.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X