சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலை பாதைகளில் சரிந்த பாறைகள்

Added : டிச 03, 2019
Share
Advertisement
குன்னுார் : மழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில், 8ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கடந்த மாதம் பெய்த கன மழையால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், 16 நாட்கள், ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, நவ., 30, டிச.,1ம் தேதி,
 மலை பாதைகளில் சரிந்த பாறைகள்

குன்னுார் : மழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில், 8ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கடந்த மாதம் பெய்த கன மழையால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், 16 நாட்கள், ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, நவ., 30, டிச.,1ம் தேதி, ரயில் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாறைகள் சரிந்ததால், இரண்டு நாட்களாக போக்குவரத்து தடைப்பட்டது.இன்று ரயில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், கன மழை தீவிரம் அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 8ம் தேதி வரை மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஊட்டி - குன்னுார் இடையே, மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொல்லி மலைநாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்ல, காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி வழியாக சாலை வசதியுள்ளது. இவ்வழியில், 70 கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால், கனரக வாகனங்கள் செல்வது சிரமம்.இதையடுத்து, முள்ளக்குறிச்சியில் இருந்து நரியன்காடு வரை, 16 கி.மீ.,க்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

தற்போது ஆத்துார், ராசிபுரத்திலிருந்து, இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக தொடர் மழை பெய்வதால், மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்படுவதுடன், பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.நேற்று முன்தினமும், நேற்றும், மூலக்குறிச்சியில், பெரிய பாறைகள் சரிந்தன. இதனால், இரு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X