பொது செய்தி

இந்தியா

பெண்கள் பாதுகாப்பு: பஞ்சாப் அரசு புதிய திட்டம்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement

அமிர்தசரஸ்: இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் யாரேனும் தவித்தால் 100க்கு போன் செய்தால் போதும், அந்த இடத்திற்கே போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்து விடுவர் என பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.






நாடு முழுவதும் பெண்கள் பலாத்காரம் அதிகரித்து வருவதாக பார்லி.,யில் எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலித்தது. இது தொடர்பாக கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் ஒரு புதிய திட்டத்தை துவக்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில்; இரவு நேரங்களில் ஏதேனும் ஒரு பிரச்னையால் தவிக்கும் பெண்களுக்கு போலீசார் உதவி செய்வர். இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்கள் அழைப்பதற்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.





100, 112, 181 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போகும். இதில் எங்கும் தவிக்கும் பெண்கள் நிலையை கூறினால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பத்திரமாக வீட்டில் கொண்டு விடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
04-டிச-201908:23:20 IST Report Abuse
Krishna குட் Move
Rate this:
Share this comment
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
04-டிச-201905:14:51 IST Report Abuse
Citizen_India சார் நம் நாட்டில் வெளியே பயிரை மேயும் பல அவலங்கள் நடந்துள்ளன. பஞ்சாபில் போலீஸ் நல்லவங்களா இருக்கலாம். பெரும்பாலான போலீஸ் ரவ்டிகலை விட கீழ் தனமானவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X