சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி டாக்டரின் சிகிச்சை பிளஸ் 2 மாணவி மரணம்

Added : டிச 03, 2019
Advertisement

சேலம் : போலி டாக்டர் அளித்த சிகிச்சையால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, பிளஸ் 2 மாணவி பலியானார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி குருநாதன் மகள் சுவேதா, 16; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.கடந்த, 25ம் தேதி, சுவேதா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நடுவலுாரில், வீட்டுடன் இணைந்த, தனியார் மெடிக்கலில் இருந்த ஜெயபால், 36, என்பவர், மாணவிக்கு, இரண்டு ஊசி போட்டார்.அதில், மாணவியின் இடுப்பில் வீக்கம் ஏற்பட்டு, சீழ் பிடித்துள்ளது.

பின், காய்ச்சல் தீவிரமடைந்ததால், 28ல், சேலம் அரசு மருத்துவமனையில், மாணவி அனுமதிக்கப்பட்டார்; 30ல், அவர் உயிரிழந்தார்.இது குறித்து, கெங்கவல்லி மருத்துவ அலுவலர் தேவராஜன், டாக்டர்கள் வேணுராஜா, சசிகலா, மருந்து ஆய்வாளர் முகமதுபிர்தவுஸ் ஆகியோர், நேற்று விசாரித்தனர்.அதில், நடுவலுாரைச் சேர்ந்த ஜெயபால், அந்த மாணவிக்கு தடுப்பூசி போட்டு, சிகிச்சை பார்த்தது தெரிந்தது. மேலும் அவர், டி.பார்ம்., படித்து முடித்து, மெடிக்கல் வைத்து, வீட்டிலேயே மருத்துவ சிகிச்சையளித்தது, தெரிய வந்தது.

இதையடுத்து, கெங்கவல்லி ஆர்.ஐ., தமிழ்செல்வி, வி.ஏ.ஓ., கனகம், மருத்துவ குழுவினர், ஜெயபால் வீட்டுக்கு, 'சீல்' வைத்தனர். தலைமறைவான ஜெயபாலை, கெங்கவல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X