சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது

Added : டிச 03, 2019
Advertisement

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, விபத்தில் சிக்கிய காரில் இருந்து, 330 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற, 'ஸ்கார்பியோ' கார், நேற்று அதிகாலை, 5:15 மணியளவில், பெரம்பலுார் மாவட்டம், பேரளி அருகே, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.இதில், காரில் பயணம் செய்த இருவருக்கு, லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், காருக்குள் இருந்த மூட்டைகளை மீட்டு, சாலையோரம் அடுக்கி, பிளாஸ்டிக் விரிப்பால் மூடி, மறைத்து வைத்தனர்.

சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து, மருவத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தஞ்சாவூரைச் சேர்ந்த, 26, 49 வயதுடைய இருவரையும் கைது செய்து, 12 மூட்டைகளில் இருந்த, 330 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X