சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே மகனை இழந்து விட்டேன்

Added : டிச 03, 2019
Advertisement

சேலம் : யானை மிதித்து கொன்ற பாகன் குடும்பத்துக்கு, வனத்துறை சார்பில், 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. ஒரே மகனை இழந்து விட்டதாக, பாகனின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

சேலம், ஏற்காடு அடிவாரம், குரும்பப்பட்டி வன உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், மதுரை அழகர் கோவில் பெண் யானை ஆண்டாள், 68, நேற்று முன்தினம், பாகன் காளியப்பனை மிதித்து கொன்றது.சிதைந்த பாகனின் உடல், மூட்டையாக கட்டப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து, அவரது பெற்றோர், மனைவி சபரி, 32, உள்ளிட்ட உறவினர்கள், நேற்று மருத்துவமனைக்கு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், மதியம், 1:00 மணிக்கு, பாகனின் உடலை பெற்றுக் கொண்டனர். வனத்துறை ஊழியர்கள், மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் காசோலையை, சபரியிடம் வழங்கினார். தவிர, சேலம் மண்டல அளவில், வன ஊழியர்கள், 1 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்தனர். பாகனுக்கு, 13, 8 மற்றும் 4 வயதில், மூன்று மகன்கள், 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.பாகனின் தந்தை மருதாசலம் கூறுகையில், ''ஒரே மகனை பறிகொடுத்து விட்டேன்.

எனக்கு கொள்ளி போட வேண்டிய மகனுக்கு, நான் கொள்ளி போட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது,'' என, கண்ணீர் மல்க கூறினார்.மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, ''மயக்க ஊசி போட்டு, மூன்று மணி நேரத்துக்கு பின், கண் விழித்த ஆண்டாள் இயல்பு நிலையில் உள்ளது. விரைவில், வேறு முகாமுக்கு மாற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X