அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தி மொழி பயிற்சி தி.மு.க., எதிர்ப்பு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 'உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஹிந்தி மொழி பயிற்சி அறிவிப்பை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் திரும்பப் பெற வேண்டும்' என, முன்னாள் தி.மு.க., அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அழிப்புத் துறையாகவே தற்போது மாறியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுகலை எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கான ஹிந்தி மொழி பயிற்சியை, அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்துள்ளார்.

தமிழில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள், ஹிந்தி மொழி கற்றால், வேலை வாய்ப்பு உருவாகும் என்ற, பழைய புளித்து போன கதையை, மீண்டும் கூறியுள்ளார். உடனே, இந்த அறிவிப்பை, அமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
04-டிச-201910:22:57 IST Report Abuse
Loganathan Kuttuva மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எனவே மற்ற முக்கியமான மொழிகளை கற்பது அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X