சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் தரைப்பாலம் மூழ்கியது

Added : டிச 03, 2019
Advertisement
 தஞ்சையில் தரைப்பாலம் மூழ்கியது

தஞ்சாவூர் : மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை மழையால், பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியது.

பட்டுக்கோட்டை அருகே, நேற்று முன்தினம், கண்ணனாற்றில், உடைப்பு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கியது. இதனால், பட்டுக்கோட்டை - மதுக்கூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள், வயலில் தேங்கிய தண்ணீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடிபம்பில் தானாக கொட்டிய நீர்தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் ஒரு வாரமாக, தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக உயர்ந்துள்ளது. திருவிடைமருதுார், எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் உள்ள, அடிபம்பு குழாயில், நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, தண்ணீர் தானாக கொட்டியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தண்ணீர் கொட்டியதாக, மக்கள் தெரிவித்தனர்.புளிய மரம் வேரோடு சாய்ந்தது.

அரியலுார் மாவட்டத்தில் நேற்று, 13 செ.மீ., மழை பெய்தது. பாக்கிநாதபுரம் கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, புளிய மரம் வேரோடு சாய்ந்தது. ஏரி மதகு உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர் நாசம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லுார் கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஏரி நிரம்பியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஏரியின் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் இருந்து தண்ணீர், விளைநிலங்களுக்குள் பாய்ந்தது.

இதில், 300 ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் மூழ்கின.வருவாய் துறை அதிகாரிகள், நேற்று காலை, மணல் மூட்டைகள் அமைத்து, உடைப்பை தற்காலிகமாக சரிசெய்தனர். மாவட்டத்தில், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள், நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தன. கொடிவேரியில் குளிக்க தடைஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 30 ஆயிரம் கன அடி உபரிநீர், பவானி ஆற்றில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கைதேனி மாவட்டம், வைகை அணையின் உயரம், 71 அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்வதால், நீர்வரத்தும் கணிசமாக இருந்தது. இதனால் அணை நீர் மட்டம், 66 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையில் இருந்து, எந்த நேரத்திலும் கூடுதல் நீர் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால், தேனி, திண்டுக்கல் மாவட்ட வைகை கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அணைக்கான நீர்வரத்து, வினாடிக்கு, 4,008 கன அடி; வெளியேற்றம், 360 கன அடியாக இருந்தது.தாமிரபரணியில் வெள்ளப்பெருக்குதிருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணை நிரம்பியது. நேற்று மாலை, வினாடிக்கு, 5,889 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, 7,340 கன அடி நீர், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே, கடனாநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரும், மழைநீரும் சேர்ந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரிய அணையான, 118 அடி உயரம் உடைய, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 96.40 அடியாக இருந்தது. நாளைக்குள், அணை 100 அடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X