சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: பல் சுத்தம்

Added : டிச 03, 2019
Advertisement

தினமும் பல் துலக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் தினமும் மூன்று முறை அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை வாய்ப்பு குறைவாக உள்ளது. சரியாக பல் துலக்காமல் இருந்தால் ரத்தத்தில் பாக்டீரியா அதிகரிக்கும். இதனால் உடலில் அழற்சி உருவாகி, அது இருதய துடிப்பில் மாற்றத்தை உருவாக்கும் என தென்கொரியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.16 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் மூன்று முறை பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


தகவல் சுரங்கம்: முதல் வீரர்

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். இதில் பல வீரர்கள் ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியில்லாமல், இச்சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் புடோர்ஜி. 1984 மே 9ம் தேதி இச்சாதனையை நிகழ்த்தினார். இவர் ஏற்கனவே 1960 மற்றும் 1962ல் எவரெஸ்ட் பயணம் மேற்கொண்டார். இது தோல்வியில் முடிந்தது. 1965ல் வெற்றிகரமாக ஏறி சாதித்தார். துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படை சார்பாக 1987ல் உலகின் மூன்றாவது பெரிய சிகரமான கஞ்சன்ஜங்காவில் ஏறியபோது மரணமடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X