சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழில் பணி போலீஸ்காரர் கைது

Added : டிச 03, 2019
Advertisement

ராமநாதபுரம் : போலி சான்றிதழ் வழங்கி, விளையாட்டு இட ஒதுக்கீட்டில், பணியில் சேர்ந்த, திருச்சி போலீஸ்காரர் உட்பட மூன்று பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் பெற்று, பலர் போலீஸ் பணியில் சேர்ந்து உள்ளதாக, ராமநாதபுரம், எஸ்.பி., வருண்குமாருக்கு புகார் சென்றது.இதையடுத்து, இரு தனிப்படையினர் விசாரித்தனர். கமுதி அருகே, ஓ.கரிசல்குளத்தைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 35, என்பவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, கபடி பயிற்சியாளர் சீமான், 57, போலி சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், ராஜிவ்காந்தி, சீமான் ஆகியோரை கைது செய்தனர். சீமானிடம் விசாரித்ததில், 'தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாடும் வீரர்கள், ஏழு பேர்; அவர்களுக்கு சப்ஸ்டிடியூட்டாக செல்லும், ஐந்து பேருக்கு சான்றிதழ்கள் வழங்குகிறோம். 'இதில், சப்ஸ்டிடியூட்களுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்து, விற்பனை செய்தோம்' என, தெரிவித்தார். கமுதி அருகே, ஓ.கரிசல்குளத்தைச் சேர்ந்த மணிராஜ், 23, கடந்தாண்டு போலீஸ் தேர்வில் பங்கேற்று, போலி சான்றிதழ் மூலம், விளையாட்டு இடஒதுக்கீட்டில், பணியில் சேர்ந்தார்.

தற்போது, திருச்சி ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தார்; அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், போலி சான்றிதழ் மூலம், அரசுப் பணியில் சேர்ந்த ஆறு பேரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X