பொது செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து பலியான பிள்ளைகளின் கண்கள் தானம்

Added : டிச 03, 2019
Advertisement

கோவை : மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த, 17 பேரில், இருவரின் கண்கள், தானமாக வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில், நேற்று முன்தினம் அதிகாலை, காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். இதில், இதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் செல்வராஜ் மகள் நிவேதா, 20, மகன் ராமநாதன், 15, ஆகியோரும் அடக்கம்.நிவேதா, கல்லுாரி முதலாம் ஆண்டு, ராமநாதன், பிளஸ் 1 படித்து வந்தனர். இருவரும், பெரியம்மா சிவகாமி வீட்டில் தங்குவது வழக்கம். இதேபோல், ஞாயிற்றுக் கிழமை இரவும், தங்கியுள்ளனர்.
மறுநாள் அதிகாலை நடந்த அந்த பயங்கரத்தில், மூன்று வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்த, 15 பேருடன், இவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் சடலங்களும், பரிசோதனைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டன. 'இளம் வயதினர் என்பதால், அவர்களது கண்களை தானமாக வழங்க முடியும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். மகன், மகளது கண்களை தானமாக வழங்க, தந்தை செல்வராஜ் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, கண்கள் தானமாக பெறப்பட்டன.

துயர சம்பவத்தில், இரு பிள்ளைகளையும் பறிகொடுத்த நிலையிலும், அவர்களது கண்களை தானமாக வழங்க செல்வராஜ் சம்மதம் தெரிவித்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X