பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய தலைவருக்கு 'நோட்டீஸ்'

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : மின்கம்பி அறுந்து விழுந்து, பெண் பலியான சம்பவம் குறித்து பதிலளிக்க, மின்வாரிய தலைவருக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பவானி நகரை சேர்ந்தவர், ராஜவேல். இவரது மனைவி காவேரி, 32. இவர்களுக்கு, சூரியபிரகாஷ், 9, ரித்தீஷ், 7 என, இரு மகன்கள். பள்ளிக்கு சென்ற மகன்கள் வருகைக்காக, காவேரி, மாமியார் பத்மாவதியுடன், வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது, வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்தில் இருந்து, திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் உட்பட, நான்கு பேரும் மயங்கினர்.

இதில், காவேரி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை நடத்தி, நான்கு வாரத்திற்குள் உரிய பதில் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X